அனிதாவுக்காக தமிழகமே கொந்தளிக்கிறது.. முதல்வருடன் பாலாறு - கோதாவரி இணைப்பு குறித்து பேசிய தமிழிசை
நீட் தேர்வு இந்தியா முழுவதும் உள்ள பிரச்சினை, தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
சென்னை: அனிதா மரணத்திற்கு தமிழகமே கொந்தளிப்பில் இருக்க கோதாவரி - பாலாறு இணைப்பு பற்றி முதல்வர் பேசியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.
நீட் தேர்வு இந்தியா முழுவதும் உள்ள பிரச்சனை என்பதால் தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கமுடியாது பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார். முதல்வரை சந்தித்து பேசிய பின்னர் இதனை தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். சென்னை கீரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு சென்று தமிழிசை சவுந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பேசினார்.
முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறினார். மாணவர்கள் யாரும் விபரீத முடிவை எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
கோதாவரி - பாலாறு இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடியுடன் பேசியதாகவும் நீட் தேர்வு இந்தியா முழுவதும் உள்ள பிரச்சனை என்பதால் தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications