மக்களைக் கொச்சைப்படுத்தும் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்.. தமிமுன் அன்சாரி ஆவேசம்
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய நடிகர் ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் போலிஸ் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொதுமக்களை, மனிதநேய ஜனநாயக கட்சி யின் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவரிடம் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சையும், செய்தியாளர்கள் பேட்டி குறித்தும் கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அவர்களை அமைதிப்படுத்திய தமிமுன் அன்சாரி பின்னர் வாயில் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி இறந்த 18 வயதே ஆன ஸ்னொலின் வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அன்சாரி. அப்போது அவர் கூறுகையில் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம்
அன்சாரி கூறுகையில், தூத்துக்குடியில் பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்ட போலிஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். மண்ணூரிமைக்காக போராடியவர்களை மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்
தூத்துக்குடியில் போலிஸார் பொதுமக்களை வீடுதோறும் சென்று மிரட்டுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது. குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மீது மனித உரிமை மீறல்கள் குறித்து புகார்கள் வருவதால் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

மன்னிப்பு கேளுங்கள் ரஜினி
தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய நடிகர் ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தான் பேசியதை திரும்பப் பெற வேண்டும். புரிதலே இல்லாமல் பேசுகிறார் ரஜினி. அறவழியில் போராடியவர்களை கொச்சைப்படுத்தியுள்ளார் ரஜினி.

மக்களை வேதனைப்படுத்துகிறார்
போலீஸாரிடம் வாங்கிய அடி கொடுத்த வலியை விட மிகப் பெரிய வலி்யும், வேதனையும் இவரது பேச்சால் மக்களுக்கு வந்துள்ளது. ரஜினி குறித்து மக்கள் பெரும் குமுறலுடன் உள்ளனர். எந்தப் பிரச்சினையிலும் அவருக்கு ஆழமான பார்வை இல்லை என்பது பெரும் வருத்தத்திற்குரியது என்றார் அன்சாரி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications