"தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு!" தச்சங்குறிச்சியில் தொடங்கியது.. சீறி பாயும் காளைகள்!
புதுக்கோட்டை: இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜன. மாதம் மாதம். இடையில் சில ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட போதிலும், பிறகு 2017 முதல் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி 2024ஆம் ஆண்டிற்கான முதல் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது. இதில் சுமார் 700 காளைகள் பங்கேற்க உள்ளன.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் நடந்தாலும் கூட தமிழ்நாட்டிலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் நடக்கிறது. அதன்படி இன்று இந்தாண்டின் முதல் போட்டி இன்று தச்சங்குறிச்சியில் நடக்கிறது. புதுக்கோட்டை கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக வாடிவாசல், கேலரி, மேடை, இரும்பு தடுப்புகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு நடத்தப்பட்டுள்ளது. காரைக்குடி, திருப்பத்தூர், திண்டுக்கல், தஞ்சாவூர், தேவகோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் இதில் கலந்து கொள்ள உள்ளன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 746 காளைகள் பங்கேற்றுள்ளன.
அதேபோல காளைகளைப் பிடிக்கப் 297 காளையர்கள் இதில் களமிறங்க உள்ளனர். வழக்கம் போல இந்தாண்டும் பேட்ச் பேட்ச்சாகவே காளையர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் வெல்லும் காளைகளுக்கும், அதை அடக்கும் வீரர்களுக்கும் பைக், கட்டில், பீரோ, ரொக்க பரிசுகளும் வழங்கப்பட இருக்கிறது. அரசு விதிமுறைகள் படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளது.
போட்டி தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். கோட்டாசியர் உறுதிமொழியை வாசிக்க அதை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரைக் கடந்தாண்டு அங்கே 48 இடங்களில் ஜல்லிக்கட்டும், 7 இடங்களில் மஞ்சுவிரட்டும், 17 இடங்களில் வடமாடு மஞ்சுவிரட்டும் நடைபெற்றது. இந்தாண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications