ஒருவர் பணத்தை வைத்து.... மற்றொருவர் பிணத்தை வைத்து அரசியல்... தமிழிசை பொளேர்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் ஒரு அணியினர் பணத்தை வைத்தும் மற்றொரு அணியினர் பிணத்தை வைத்தும் அரசியல் செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் பணத்தையும், பிணத்தையும் வைத்து அரசியல் செய்கின்றனர் என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும், திமுகவும் போட்டி போட்டு கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அச்சமயம் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கோடிக்கணக்கிலான பணத்தை செலவிடுவதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. வாக்குக்கு ரூ.7000 வரை வழங்கப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ஜெயலலிதாவின் சவப்பெட்டி போன்று மாதிரியை தயாரித்து ஓபிஎஸ் அணியினர் கடந்த வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தவுடன் அச்செயலை ஓபிஎஸ் தரப்பினர் கைவிட்டனர். பாஜக வேட்பாளர் கங்கை அமரனை ஆதரித்து இன்று ஆர்.கே.நகரில் வீதிவீதியாக தமிழிசை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவிக்கையில், அதிமுகவின் ஒரு அணியினர் பணத்தை வைத்து அரசியல் நடத்துகின்றனர், மற்றொரு அணியினர் பிணத்தைக் கொண்டு அரசியல் நடத்துகின்றனர்.
இந்த இரு அணிகளும் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். உண்மையான அதிமுக என்பது ஜெயலலிதா மறைவோடு சென்றுவிட்டது என்றார் தமிழிசை.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications