29 வயது ஜூனியர்.. அமைச்சருடன் மோதும் சீனியர்.. தஞ்சாவூர் திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுக அதிமுகவுக்கு சரியான போட்டியைத் தரும் வகையிலான வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோடேட்டா:
டாக்டர் அஞ்சுகம் பூபதி
தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார். பெண் மருத்துவரான இவருக்கு வயது 28 தான் ஆகிறது. இவரது தந்தை பூபதி நகராட்சித் தலைவராக இருந்தவர். இவரது தாயார் கல்வித்துறையில் பணியாற்றியுள்ளார். திமுக மருத்துவர் அணி தெற்கு மாவட்ட அமைப்பாளர்.
க. அன்பழகன்
கும்பகோணம் தொகுதி வேட்பாளராக க. அன்பழகன் போட்டிடுகிறார். பத்தாவது படித்துள்ளார். சிட்டிங் எம்.எல்.ஏ ஆவார். குடந்தை அன்பு மருத்துவமனை, தமிழ்ச் சங்கம் ஆகியவற்றை நிறுவியவர். திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
துரை சந்திரசேகரன்
திருவையாறு தொகுதி வேட்பாளராக துரை சந்திரசேகரன் போட்டியிடுகிறார். பி.ஏ., எல்.எல்.பி. படித்துள்ல இவர் 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் திருவையாறு தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 2015 ஆம் ஆண்டு முதல் திமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.
எம்.ராமச்சந்திரன்
ஒரத்தநாடு தொகுதி திமுக வேட்பாளர் எம்.ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் முன்பு இருந்த திருவோணம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். திருவோணம் தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் ஒரத்தநாடு தொகுதியில் இருப்பதால் இவரை தொகுதி மக்களுக்கு நன்றாகத் தெரியும். அமைச்சர் வைத்திலிங்கத்துக்குச் சமமான போட்டியாளராக கருதப்பட்டாலும் கூட செலவு செய்யக் கூடிய வகையில் பலமானவர் இல்லையாம்.
கோவி செழியன்
திருவிடைமருதூர் தொகுதியில் கோவி செழியன் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக தலைமைக் கழகப் பேச்சாளராக, மாணவரணி இணைத் செயலாளராக, சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் உள்ளார். கடந்த முறை திருவிடைமருதூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
என்.அசோக்குமார்
பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் அசோக் குமார். தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமத்தை சேர்ந்த இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேராவூரணி நகரில் வசிக்கிறார். இவர் தொடர்ந்து 2-வது முறையாக பேராவூரணி பேரூராட்சித் தலைவராக பதவி வகிக்கிறார். திமுகவை சேரந்த முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தியின் மருமகனாவார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications