தஞ்சை தொகுதி: தபால் ஓட்டு பெட்டியின் சாவி மாயம்.. வாக்கு எண்ணிக்கை தாமதம்
தஞ்சைத் தொகுதியில் தபால் ஓட்டுக்கள் வைக்கப்பட்டிருந்த சாவி மாயமானதால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.
தஞ்சை: கடந்த 19ம் தேதி நடந்த தஞ்சை தொகுதிக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணுவதற்கு தயாரான போது, தபால் ஓட்டுக்கள் வைக்கப்பட்டிருந்த சாவி மாயமானதால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
தஞ்சை தொகுதியில், மொத்தம் 2 லட்சம் 68 ஆயிரத்து 516 வாக்குகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 389 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதே போல் 30 தபால் ஓட்டுக்கள் இங்கு பதிவாகி உள்ளன. இந்த வாக்குகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சாவி தொலைந்துவிட்டது. இதனால் தஞ்சைத் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை தேடி கண்டுபிடித்த பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனால் தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி சற்று தாமதமானது.
தஞ்சைத் தொகுதியில் உள்ள மொத்தம் 30 வாக்குகளில் 29 வாக்குகளை அதிமுக வேட்பாளர் ரங்கசாமி பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட அஞ்சுகம் பூபதி ஒரு வாக்கை பெற்றுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications