நல்லா வெடிங்க.. முட்ட முட்டக் குடிங்க.. டாஸ்மாக்கின் 'சியர்ஸ்' தீபாவளி!
சென்னை: தீபாவளிக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஆனா்ல தமிழக அரசின் டாஸ்மாக்குக்கோ ஒரே இலக்குதான். அது, நிறையப் பேர் வந்து சரக்கு சாப்பிட வேண்டும், நமக்கு கல்லாக் கட்ட வேண்டும், வசூலில் சாதனை புரிய வேண்டும் என்பதே அது.
அது என்னவோ, என்ன மாயமோ தெரியவி்ல்லை. பண்டிகைக் காலகளில் மக்கள் பண்டிகையை கொண்டாடுவதை விட மது அருந்தவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர் - எல்லோரும் அல்ல, குடிகாரர்கள் மட்டும்.
அந்த வகையில்,பண்டிகை சமயத்தில்தான் அதிக அளவில் மது விற்பனை களை கட்டும். இந்த தீபாவளிக்கும் பெருமளவில் மது விற்பனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் காசை அள்ளிப் போட டாஸ்மாக்காரர்கள் ஆவலாக உள்ளனராம்

சாதா நாட்களில்
தமிழகத்தில், சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு 60 கோடி முதல் 70 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும்.

புத்தாண்டு, பொங்கல், தீபாவளிக்கெல்லாம்
புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மதுபான விற்பனை இரண்டு மடங்கு அதிகரிக்கும்.

150 கோடி வரை போய்ரும்ல
இந்த மாதிரியான சமயங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி முதல் அதிகப்பட்சம் 150 கோடி வரை விற்பனையாகும்.

போதை தீபாவளி
இந்த தீபாவளிக்கும் மது விற்பனை களை கட்டியுள்ளதாம். கடைகள் அனைத்தும் கலர் கலராக கலகலகத்து வருகிறது.

இன்னிக்கு ராத்திரி குடிச்சே ஆகனும்
பெரும்பாலும் தீபாவளிக்கு முதல் நாள் இரவில்தான் குடிகார பார்ட்டிகள் களை கட்டும். இரவு குடிப்பதில்தான் பலருக்கும் சந்தோஷம், குடித்து விட்டு தெருவில் விழுந்து கிடப்பது, உரண்டை இழுப்பது, அடிதடி கலாட்டா என்று ஆரம்பித்தால்தான் அவர்களுக்கு தீபாவளி இனிக்கும்.

ஒரே நாளில் 150 கோடிக்கு இலக்கு
இவர்களைத்தான் டாஸ்மாக்கும் குறி வைத்துள்ளது. இவர்கள் மூலமாக தீபாவளிக்கு முதல் நாளில் ரூ. 140 முதல் 150 கோடி வரை விற்பனையாகும் என்று டாஸ்மாக் எதிர்பார்க்கிறது.

அடுத்த நாளும் குடிக்கனும்ய்யா
அதேபோல தீபாவளிக்கு அடுத்த நாளும் பலர் லீவு போட்டு விட்டு குடிப்பது வழக்கம். அந்த வகையில் ரூ. 110 கோடி வசூலாகும் என்ற கணக்குடன் டாஸ்மாக் உள்ளது.

ஆக மொத்தம்
ஆக மொத்தம் தீபாவளியையொட்டி ரூ. 250 கோடிக்கு மேல் எ்ப்படியும் வசூல் வந்து விடும் என்ற திடமான நம்பிக்கையில் டாஸ்மாக் உள்ளது.
எனவே குடிகாரர்களே, நல்லா பட்டாசு வெடிங்க, சரக்கை வாங்கி மூக்கு முட்ட முட்டக் குடிங்க.. டாஸ்மாக்கை வாழ வைங்க
-
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications