தீவிரமடையும் மதுவிலக்கு போராட்டம்- டாஸ்மாக் கடைகளில் கேமரா பொருத்த அரசு முடிவு
நெல்லை: மதுக் கடைகளை மூடக் கோரி போரட்டம் வலுத்து வருவதால் டாஸ்மாக் கடைகளில் கேமரா பொருத்த அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அடிமையாகி வருகின்றனர்.

இதனால் பல இடங்களில் சடடம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு காந்தியவாதி சசிபெருமாள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி பலியானார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி நாவனூரில் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதில் கடை ஊழியர் செல்வம் உயிரிழந்தார். இதையடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு கருதி சி.சி.டி.வி கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக மண்டல மேலாளர்கள் தலைமையில் மாவட்ட மேலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மதுரை மண்டல சுமார் 1500 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க தேவைப்படும் கேமராக்கள் குறித்து மண்டல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில கடைகளில் முன்னோட்டமாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications