For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிகாரர்களுக்கு என்னாச்சு.. திருந்திட்டாங்களா?.. விற்பனை சரிவால் ஆய்வில் குதித்த டாஸ்மாக்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக்ததில் இயங்கி வரும் சுமார் 6 ஆயிரம் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது மற்றும் பீர் வகை மதுபானங்களின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து, உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

2014 ஆம் ஆண்டு மதுபான விற்பனை மூலமாக தமிழக அரசுக்கு ரூபாய் 26,188 கோடி வருமானம் வந்தது. டாஸ்மாக் கடைகள் மூலமாக வருவாய் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் தற்போது திடீரென டாஸ்மாக் வருவாய் குறைந்துள்ளது.

TASMAC sales reduces day by day in TN

தமிழகம் முழுவதும் பெரும்பலான டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை குறைந்துள்ளதால், வருவாய் 6 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது.

இதையடுத்து, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய மண்டலங்களில் ஆய்வு நடத்த 5 மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை சரியக் காரணம் என்ன, குடிமக்களுக்கு என்ன ஆனது என்று இவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
TASMAC sales reduced a lot in TN, 5 special officials appointed for inquire about the fell down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X