3 நாட்கள் விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் முட்டி மோதி மது வாங்கிய 'குடி'மகன்கள்
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையொட்டி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என்பதால் அந்த கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது.
ஆர்.கே. நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதையடுத்து நேற்று மாலை 5 மணியில் இருந்து நாளை நள்ளிரவு 12 மணி வரை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் வாக்குகள் எண்ணப்படும் 30ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதையொட்டி நேற்று மாலை 5 மணி வரை அந்த கடைகளில் ஆண்களின் கூட்டம் அலைமோதியது. 3 நாட்களுக்கு தேவையான மதுவை பலர் வாங்கிச் சென்றனர். மாலை 5 மணிக்கு கடைகள் மூடப்பட்டபோது பலர் ஏம்ப்பா கடையை அதற்குள் மூடுகிறார்கள் என்று புலம்பினர்.

சென்னையில் சில டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நேரத்தில் பலர் ஓடி வந்து மதுபாட்டில்களை அவசர அவசரமாக வாங்கிச் சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று வியாபாரம் அமோகமாக இருந்தது.
கடைகள் மூடப்பட்ட பிறகு சில இடங்களில் குடிபோதையில் சிலர் கதவை தட்டிக் கொண்டே நின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications