பள்ளி, கோவில் அருகே டாஸ்மாக் கடை: முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் கைது
நெல்லை: நெல்லை அருகே பள்ளி மற்றும் கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை அருகே உள்ள களக்காட்டில் மொத்தம் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பள்ளி மற்றும் கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, இந்த 2 கடைகளையும் மூட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பொது நல அமைப்பினர் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினர். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகளை மூடப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி களக்காட்டில் பக்தர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தி நேற்று மாலை திடீரென
பொதுமக்களும், மக்கள் போராட்ட குழுவினரும் குவிந்தனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளர் நெல்சன் தலைமையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். இந்நிலையில் நாங்குநேரி ஏஎஸ்பி சுகுனாசிங் தலைமையிலான போலீசார் உடனடியாக டாஸ்மாக் கடை முன்பு குவிக்கப்பட்டனர். பாதி வழியிலேயே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications