500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுப்பு.. மதுப்பிரியர்கள் ஏமாற்றம்
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் வாங்க மறுத்ததால் மதுப்பிரியர்கள் அவதிக்குள்ளாகினர்.
சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல் பங்க், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 11-ந் தேதி வரை ரூபாய் நோட்டுக்கள் செல்லும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் உத்தரவை ஏற்காமல் ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றன பெட்ரோல் நிலையங்கள்.

அது ஒரு புறம் இருக்க, தமிழகத்தை பொறுத்த வரை அதிக பணம் நடமாடும் இடங்களில் முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகளும் ஒன்று. இங்கு எவ்வளவு பணம் கொண்டு போனாலும் சில்லறை கிடைக்கும். அந்த அளவுக்கு வியாபாரம் நடக்கிறது. ஒரு சிலர் ரூபாய் நோட்டுக்களை எளிதாக மாற்றிக்கொள்ள நாடுவது டாஸ்மாக் கடைகள் தான்.
இதனிடையே மத்திய அரசின் திடீர் உத்தரவால் ரூ. 1000 ரூ.500 நேட்டுக்கள் வாங்க கூடாது என டாஸ்மாக் கடைகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடையில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ரூ.500 ஆயிரம் நோட்டுக்களை டாஸ்மாக்கடைகளில் மாற்றிக் கொள்ளலாம் என நினைத்தவர்கள் இதனால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளது மதுப்பிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சில்லறையுடன் வந்தால் மட்டுமே மது வழங்கபடும் என கூறுவதால் டாஸ்மாக் ஊழியர்களுடன் மதுப்பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுப்பிரியரகள் சில்லரை கிடைக்காமல் திண்டாடினர். இந்த நிலை இன்றாவது மாறுமா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications