மக்கள் ஆவேசத்தில் சிக்கி பொசுங்கிய டாஸ்மாக் மதுக் கடை.. தாம்பரத்தில்!
சென்னை தாம்பரம் அருகே உள்ள மதுக்கடைக்கு பொதுமக்கள் தீவைத்து கொளுத்தினர்.
சென்னை: சென்னை தாம்பரம் அருகே உள்ள மதுக்கடையை அகற்ற கோரியும் அகற்றாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அக்கடையை தீவைத்து கொளுத்தினர்.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடித்து விட்டு வாகனங்களை இயக்குவதால் பெரும்பாலான விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன என்று காரணம் காட்டி நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனால் தமிழகம் நெடுஞ்சாலையில் உள்ள 3,500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி ஊழியர்கள் வேலையிழந்ததால், ஊருக்குள் கடையை திறக்க இடம் தேடி வந்தனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டாஸ்மாக் கடையை கண்டித்து ஆங்காங்கே போராட்டம், மறியல் நடத்தி வருகின்றனர். மேலும் எதிர்ப்பை மீறி அமைக்கப்படும் கடைகளை பெண்களே அடித்து நொறுக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் தாம்பரம் அருகே அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். எனினும் மூடாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் அக்கடைக்கு இன்று தீவைத்து கொளுத்தினர். கடையானது முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications