மொடாக் குடியர்களே + மெகா குடிகாரர்களே.. மெக்சிகோவிலிருந்து ஒரு "ஜில் ஜில்" செய்தி!
சென்னை: சூழ்நிலைக்கு ஏற்ப குடிகாரர்களுக்கு சரக்குகளை சப்ளை செய்வதில் தமிழக அரசுக்கு நிகர் தமிழக அரசுதான். தற்போது கோடை காலம் வந்து விட்டது. வெயிலும் வெளுத்து வருகிறது. எனவே குடிகாரர்களின் இதயங்களைக் குளிர்விக்கும் வகையில் வெளிநாட்டு பீரை இறக்குமதி செய்து சந்தோஷப்படுத்தவுள்ளதாம் டாஸ்மாக்.
கோடை காலத்துக்காக மெக்சிகோவிலிருந்து புகழ் பெற்ற டக்யூலா வகை பீரை தமிழகத்தில் உள்ள தனது விற்பனை மையங்கள் மூலம் விற்கத் திட்டமிட்டுள்ளதாம் டாஸ்மாக் நிறுவனம்.
ஏற்கனவே உள்ள உள்ளூர் பீர்களுடன் சேர்த்து இந்த மெக்சிகோ பீரையும் விற்கிறதாம் டாஸ்மாக்.

கல்யாணி...!
தற்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கிங்பிஷர், கல்யாணி, புல்லட், 6000, மார்கோபோலோ உள்ளிட்ட பீர் ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இனி டக்யூலாவும்
இந்த வரிசையில் தற்போது மெக்சிகோவின் டக்யூலாவும் சேருகிறது. இந்த பீரும் தற்போது விற்பனையில் இணைந்துள்ளதாம். மெக்சிகோவில் பிரபலமானது இந்த டக்யூலா பீர்.

அங்கிருந்து கோவா போய்.. இங்கு வருதாம்!
இந்த மெக்சிகோ பீரானது, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கோவாவில் உள்ள நிறுவனத்தில் பாட்டிலிங் செய்யப்பட்டு, தமிழகத்துக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறதாம்.

விலை ஜாஸ்திதான்
750 மில்லி கொண்ட முழு பாட்டில் டக்யூலா பீர் ரூ.1560க்கு விற்கப்படுகிறது. அதுவே 180 மில்லி அளவிலான குவார்ட்டர் பாட்டில் ரூ.390க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செம காஸ்ட்லி மச்சி!
மற்ற வகை மதுவுடன் விலையை ஒப்பிடுகையில், இதன் விலை 4 மடங்கு அதிகம்தான். ஆனாலும் டக்யூலா தரும் உற்சாகம் தனி என்கிறார்கள் குடித்த அனுபவம் கொண்டவர்Kள்.

மொத்தம் 2 ரகம் கீதுப்பா!
டக்யூலா பீரானது, சில்வர் டக்யூலா, கோல்டு டக்யூலா என இரு ரகங்களில் விற்பனைக்கு வந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். எல்லாக் கடைகளிலும் இது கிடைக்குமாம்.
ரொம்ப நல்லதுண்ணே...!












Click it and Unblock the Notifications