மிலாடி நபி தினத்தில் மது விற்பனை- திருப்பூரில் 5 டாஸ்மாக் பார் ஊழியர்கள் கைது
திருப்பூர்: திருப்பூரில் மிலாடி நபி நாளில் கடையை திறந்து வைத்த டாஸ்மாக் பார் ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு அறிவிப்பையும் மீறி மிலாடி நபி நாளில் பெருமநல்லூர் நான்கு சாலை குன்னத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் உத்தரவின் பேரில், அவிநாசி துணை கண்காணிப்பாளர் ராமசாமி, மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் விஜயநாச்சியார் ஆகியோர் தலைமையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சித்ரா ஆகியோர் அடங்கிய குழுவினர் அந்த டாஸ்மாக் கடை பாரில் அதிரடி சோதனையிட்டனர்.
அப்போது, அந்த கடைக்கு பின்புறம் இருந்த பாரில் வைக்கப்பட்டிருந்த 1,647 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், விடுமுறை தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்ததாக, பார் ஊழியர்களான சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் குமார், சரவணன், அஜித், சிவராஜ், பாலா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, டாஸ்மாக் பார் உரிமையாளர் மணிகண்டன், பணியாளர் சுப்பிரமணி, பொறுப்பாளர் கண்ணப்பன் ஆகியோரை அவிநாசி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தேடிவருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications