வெள்ள நீரில் மூழ்கிய தாம்பரம் சானட்டோரியம் சுரங்கப் பாதை.. மக்கள் பெரும் அவதி
சென்னை: சென்னை தாம்பரம் சானட்டோரியம் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கி குளம் போல மாறியுள்ளதால் பொதுமக்கள் அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால் சென்னை நகரிலும், புறநகர்களிலும் உள்ள பெரும்பாலான சுரங்கப் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. குளங்களாக மாறியுள்ளன. இதனால் அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தேங்கிய மழை நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கையை எடுக்க மாநகராட்சி சார்பில் மெத்தனம் காட்டப்படுவதால் பல இடங்களில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் சானடோரியம் ரயில் நிலைய சுரங்கப்பாதையின் கிழக்கு பகுதியில் 5 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி உள்ளதால் சுரங்கப்பாதை மூடப்பட்டது. கடந்த 5 நாட்களாக இந்த சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததால் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரயில்வே மதில் சுவர்களை தாண்டியும், தண்டவாளத்தில் நடந்து சென்றும் ஆபத்தான நிலையில் ரயில் ஏற வேண்டிய நிலை உள்ளது. பெண்கள், வயதானவர்கள் தண்டவாளத்தை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சுரங்கப்பாதையில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்றும் மோட்டார் பழுதாகி உள்ளதாகவும், இதனை சீரமைத்து உடனடியாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, தாம்பரம் அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவபுரம் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் 300-க்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த பகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், அம்பேத்கர் புதுநகர் 5-வது தெருவில் கார்த்திக் என்ற கட்டடத் தொழிலாளி தனது வீட்டில் மோட்டார் சுவிட்ச்சை போட்ட போது ஈரம் காரணமாக ஷாக் அடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications