நடிகர் சங்கத் தலைவராக தமிழரே தேர்வு செய்யப்பட வேண்டும்... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக தமிழர் ஒருவரே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
ராஜ்குமார் பழனிச்சாமி என்பவரைத் தலைவராகக் கொண்ட இந்த அமைப்பு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசியலிலும் திரைத்துறையிலும் தமிழர் அல்லாதவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். தலைவர் பதவிகளுக்கு தமிழர் அல்லாதவர்களே போட்டியிடுகிறார்கள். இதனால் தமிழர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்கிறார்கள்.

பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த மண்ணின் மைந்தர்களே நடிகர் சங்கத்தின் தலைவர்களாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் அவ்வாறு நடைபெறுவதில்லை. நடிகர் சங்க உறுப்பினராக பிற மொழியினர் இருப்பது தவறில்லை. ஆனால் தலைவராக பிற இனத்தவர்கள் வருவதை தமிழர்கள் நாம் அனுமதிக்க இயலாது.
எல்லோரும் இங்கு வாழலாம் ஆனால் தமிழர்கள் தான் ஆளவேண்டும் என்ற அடிப்படையில் தமிழரே அரசியல் மட்டுமல்லாது திரைத்துறையிலும் தலைவர்களாக வேண்டும். விஷால் ரெட்டி அல்லது ராதாரவி போன்ற பிற மொழியினர் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டுமே தவிர தாங்களே தலைவராக இருக்க நினைப்பது தவறாகும்.
இவர்கள் தமிழகத்தின் மண்ணின் மைந்தர்கள் தலைவராக வர துணைபுரிய வேண்டும். தாங்கள் தமிழர் அல்ல என்பதை மக்களிடம் வெளிப்படையாக அறிவித்து ஒரு தமிழரையே தலைவர் பதவிக்கு அமர்த்திட வழிவகுக்க வேண்டும்.
தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதையும் தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றிட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையையும் நடிகர் சங்கம் கருத்தில் கொண்டு அதற்கான வேலைகளை செய்ய அனைத்து நடிகர்களும் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை வைக்கிறது.
தமிழர் அல்லாதவர்கள் தமிழ்நாடு நடிகர் சங்கத்தின் தலைமை பதவிக்கு போட்டியிடக் கூடாது என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை வைக்கிறது. தலைமை பதவிக்கு போட்டியிடும் தமிழர் அல்லாத நடிகர்கள் மண்ணின் மைந்தர்களுக்கு வழிவிட்டு தார்மீகப் பொறுப்புடன் அப்பதவிக்கான தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்று இந்த அமைப்பு கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications