வீட்டுப்பாடம் செய்யவில்லை... கொதிக்கும் வெயிலில் ஆடையில்லாமல் மாணவர்களை நிற்க வைத்த ஆசிரியர்!
விசாகப்பட்டிணம்: வீட்டுப்பாடம் செய்யாத இரண்டு மாணவர்களை, ஆசிரியர் ஒருவர் கொதிக்கும் வெயிலில் 3 மணி நேரம் ஆடைகள் இல்லாமல் நிற்க வைத்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் பீமுனிபட்ணம் மண்டலத்தில் உள்ள மரடபாலம் பகுதியில் உள்ள பிரைமரி பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டுப் பாடம் எழுதாமல் பள்ளிக்கு வந்த ஐந்தாம் வகுப்பு மற்றும் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் தண்டனை கொடுத்துள்ளார்.
அதன்படி, இரண்டு மாணவர்களின் மேல்சட்டையையும் கழட்டச் சொன்ன ஆசிரியர், அவர்களை சுமார் 3 மணி நேரம் வெயிலில் நிற்க வைத்துள்ளார். கோடை காலம் ஆரம்பித்து விட்டதால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, வெயிலின் கொடுமை தாங்காமல் மாணவர்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப் பட்டது.
இதனால், இரண்டு மாணவர்களும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து தகவல்களை சமர்ப்பிக்கும் படி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மண்டல கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications