தலைமையாசிரியரின் பாலியல் தொல்லை - மாணவி தீக்குளிப்பு - காயங்களுடன் உயிர் பிழைத்தார்
திருப்பூர்: திருப்பூரில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்று தீக்காயங்களுடன் மாணவி ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், மணியகாரன் பேட்டையை சேர்ந்த மாணவி 15 வயதானவர். இவர் வெள்ளகோவில் துரை ராமசாமி நகரிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய மாணவி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றபோது இலேசான காயங்களுடன் காப்பாற்றப்பட்டார். இதுபற்றி பெற்றோர்கள் விசாரித்தபோது பள்ளி தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் கடந்த சில நாட்களாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் வெள்ளகோவில் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் நேற்று முன்தினம் இரவு மரியலூயிஸை கைது செய்தனர்.
இது பெண் குழந்தைகளின் பாலியல் வழக்கு என்பதாலும், தலைமை ஆசிரியரிடம் விசாரணை போன்றவற்றால் வெள்ளகோவில் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை தவிர்க்க இவ்வழக்கு காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
அங்கு தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் மீது தற்கொலைக்கு தூண்டுதல், தற்கொலை முயற்சிக்கு காரணமாவது, குழந்தைகளை பாலியல் குற்றத்தில் இருந்து பாதுகாத்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர் போலீசார். பின்னர் தலைமை ஆசிரியர் மரியலூயிசை காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் கோவை நடுவன் சிறையில் அடைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications