2ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது
செய்யாறு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை: செய்யாறு அருகே இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த எரையூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 8 வயது மாணவி ஒருவர் 2ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் 2 மணியளவில் பள்ளியில் உள்ள கழிவறைக்கு மாணவி சென்றார். அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் குமார் (51) என்பவர் மாணவியை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கதறி அழுதபடியே பள்ளியில் இருந்து வெளியே ஓடிவந்தார்.

இது குறித்து அவரது பெற்றோர்கள் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அந்த மாணவி, ஆசிரியர் குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினாள். தகவல் அறிந்த அப்பகுதியினர் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் குமாரை பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து குமாரை மீட்டு கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications