முதல்வர் பழனிசாமியை மாற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை .. பழனியப்பன்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா தலைமையில் தான் அதிமுக செயல்படுகிறது, முதல்வர் எடப்பாடி பழனிச்சசாமியை மாற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ பழனியப்பன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனை பெசன்ட் நகர் இல்லத்தில் சந்தித்து பேசிய பின்னர் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூட்டாக பேட்டியளித்தனர்.

Team Dinakaran says CM will be shifted soon

செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ பழனியப்பன், சசிகலா தலைமையில் அதிமுக செயல்படுகிறது. எடப்பாடி, ஓ.பி.எஸ். அணி இணைவது என்பது வேடிக்கையானது என்றும் தெரிவித்துள்ளார்.

சுயநலத்துக்காக பதவிக்காக இணைக்கிறார்கள் முதல்வர் ஆகுமாறு சசிகலா காலில் விழுந்து மூத்த அமைச்சர்கள் கெஞ்சினர். பதவி ஆசை இல்லாதவர் சசிகலா.

சசிகலா தலைமையில் தான் அதிமுக செயல்படுகிறது.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் சசிகலாவுக்கு துரோகம் செய்கின்றனர்.

எடப்பாடி, ஓ.பி.எஸ். அணி இணைவது என்பது வேடிக்கையானது என்றும் சுயநலத்துக்காக பதவிக்காக இணைக்கிறார்கள் என்றும் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியை சரியாக நடத்தவில்லை. மேலும் ஆட்சி என்ற பேருந்தை ஓட்டுநர் பழனிசாமி சரியாக இயக்கவில்லை.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் பழனியப்பன் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+