ஓபிஎஸ் முதல்வரானால் உள்ளே இருந்துகொண்டே உள்ளடி வேலை செய்வோம்...எடப்பாடியை மிரட்டும் தினகரன் கோஷ்டி!
முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுக்க தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்துக்கு விட்டுக் கொடுத்தால் உள்ளே இருந்து கொண்டே குழிபறிக்கும் வேலைகளை செய்வோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் மிரட்டியுள்ளனர்.
அதிமுகவின் ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் மும்முரமாக உள்ளன. இதற்காக அதிமுகவை விட்டு ஒதுங்கியிருப்பதாக டிடிவி தினகரனும் அறிவித்துள்ளார்.

முட்டுக்கட்டை
ஆனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களோ இந்த இணைப்பு பேச்சுவார்த்தைக்கு எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போடலாம் என தீவிரம் காட்டி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் சந்தித்து பேசினர்.

ஓபிஎஸ்-க்கு எதிர்ப்பு
இந்த சந்திப்பின் போது இணைப்பு பேச்சுவார்த்தைக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருங்கள் என எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். ஆனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களோ, முதல்வர் பதவியை ஓபிஎஸ்-க்கு விட்டுத் தராமல் இருந்தால் அமைதியாக இருப்போம் என கூறியுள்ளனர்.

அமைச்சரவையை மாற்றுங்க..
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி தமக்கு உள்ள நெருக்கடிகளை விவரித்திருக்கிறார். ஆனாலும் சமாதானம் ஆகாத தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள், ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவி கொடுப்பதை நாங்கள் ஏற்கவே முடியாது. அவருக்கு முதல்வர் பதவி கொடுப்பதற்கு பதிலாக அமைச்சரவையை மாற்றி புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே என நிபந்தனை விதித்துள்ளனர்.

தனி அணிதான்...
அதையெல்லாம் செய்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என எச்சரித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கும் அசராத தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், நீங்க ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவி கொடுத்தால் எங்கள் பக்கம் இருக்கும் 25 எம்.எல்.ஏக்களும் நிச்சயம் ஒத்துழைப்பு தரமாட்டோம். சட்டசபையில் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து தனி அணியாக செயல்படுவோம் என மிரட்டியிருக்கின்றனர்.

குடைச்சல் கன்பார்ம்
அதேநேரத்தில் ஆட்சியை கவிழ்க்கவும் மாட்டோம்... ஆனால் உள்ளே இருந்து கொண்டே குடைச்சல் கொடுப்பது மட்டும் நிச்சயம் எனவும் எச்சரித்துள்ளனர். தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்களின் இந்த மிரட்டலால் எடப்பாடி தரப்பு ஆடிப் போயுள்ளதாம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications