தமிழக அமைச்சர்கள் 10 பேரின் ஊழல் பட்டியலை வெளியிடுகிறது ஓபிஎஸ் அதிமுக?
ஆர்கே நகர் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக அமைச்சர்கள் 10 பேரின் ஊழல் பட்டியலை வெளியிட ஓபிஎஸ் அதிமுக திட்டமிட்டுள்ளதாம்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரத்தில் தமிழக அமைச்சர்கள் 10 பேரின் ஊழல் பட்டியலை வெளியிட அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தேர்தல் களத்துக்கே வராமல் இருந்த 'மேட்' பேரவை தீபாவும் நேற்று படகு சின்னத்துடன் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அதிமுக (அம்மா) வேட்பாளர் தினகரன் 57,000 வீடுகள் கட்டித் தரப்போவதாக அடித்துவிட்டிருக்கிறார்.
அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. திமுக வேட்பாளர் மருது கணேஷ் உள்ளூர் பிரச்சனைகளை அதிகமாக முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறார். பாஜகவின் கங்கை அமரன், மார்க்சிஸ் கட்சியின் லோகநாதன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக( புரட்சித் தலைவி அம்மா) வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசாரத்தின் உச்சகட்டமாக தமிழக அமைச்சர்கள் 10 பேரின் ஊழல் பட்டியலை விரைவில் ஓ. பன்னீர்செல்வம் வெளியிடக் கூடும் என கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications