அனலால் தகிக்கும் தமிழகம்: வேலூர், திருச்சியில் 107 டிகிரி வெப்பம் பதிவு
சென்னை: தமிழகத்தில் திருச்சி, வேலூரில் புதன்கிழமையன்று முதல் முறையாக அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் பதிவானது.
பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசுகிறது.
தமிழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. ஆறுகளில் தண்ணீர் பெருகியது. அந்த மகிழ்ச்சி சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. பிப்ரவரியிலேயே வெப்பம் தகிக்கத் தொடங்கிவிட்டது.
வட மாவட்டங்களான சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஆகிய மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களான திருச்சி, கரூர், பெரம்பலூர் போன்ற மத்திய மாவட்டங்களிலும் கோடையின் தொடக்கத்திலேயே வெயில் வறுத்தெடுக்க தொடங்கியது.
வேலூர் மாவட்டத்தில் கடுமையாக வெயில் வாட்டி வருகிறது.

சதமடித்த வெயில்
மார்ச் மாதம் 23ம் தேதி திடீரென வெயில் தாக்கம் அதிகரித்து 106 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அதைத்தொடர்ந்து 3 நாட்கள் வெயில் குறைய தொடங்கியது. இதையடுத்து கடந்த 10ம் தேதி 102 டிகிரியும், 11ம் தேதி 103 டிகிரியும், வெயில் கொளுத்தியது.

லேசான மழை
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெப்பத்தின் தாக்கம் குறைந்து ஓரிரு மாவட்டங்களில் மழை பதிவாகியது. அதைத் தொடர்ந்து, மீண்டும் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அனல் காற்றும் வீசி வருகிறது.

107 டிகிரி வெப்பட்
புதன்கிழமையன்று 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது. தமிழகத்திலேயே அதிக பட்சமாக வேலூர், திருச்சியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. சுட்டெரித்த வெயிலால் நேற்று மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ரோட்டில் அனல் காற்று வீசியது.

மதுரையில் 105 டிகிரி
புதன்கிழமையன்று கரூர் பரமத்தி பகுதியில் 106 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. திருப்பத்தூர், தருமபுரி, சேலம், பாளையங்கோட்டை, மதுரையில் 105 வெயில் பதிவாகியுள்ளது.

சென்னையில் 102 டிகிரி
சென்னை, நாகப்பட்டினத்தில் 102 டிகிரி வெயிலும், தொண்டி, கோவையில் 100 டிகிரி வெயிலும் பதிவாகியுள்ளது. அனல் காற்று வீசுவதால் நண்பகல் நேரத்தில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications