தொடரும் பேருந்து விபத்துகள்.. முடிவிற்கு வராத போராட்டம்.. தமிழக அரசு முகம் காட்டுமா?
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் மொத்தமும் முடங்கி இருக்கிறது.
சென்னை: தமிழகம் முழுக்க பேருந்து நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பேருந்து நிறுத்தம் காரணமாக தற்காலிக ஓட்டுனர்கள் பலர் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இதனால் ஆங்காங்கே பேருந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் மொத்தமும் முடங்கி இருக்கிறது. சென்னையில் தொடங்கி குமரி வரை நடக்கும் இந்த போராட்டத்தில் இன்னும் சரியான தீர்வு எட்டப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டம் இன்றும் நான்காவது நாளாக தொடர்கிறது. தற்போது தமிழகத்தில் நகரம் முழுக்க 80% பேருந்துகள் இயங்கவில்லை. மேலும் கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் 90% பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் இந்த போராட்டத்தை செய்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுக்க தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த தற்காலிக போக்குவரத்து பணியாளர்களால் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ஆவடி பேருந்து நிலையத்தில் தற்காலிக ஓட்டுநர் ஒருவர் பேருந்தை சுவற்றில் மோதி விபத்து ஏற்படுத்தினார். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற பேருந்தை ஓட்டிய தற்காலிக ஓட்டுநர் ஒருவர் பேருந்தை பள்ளத்தில் இறக்கி விபத்து ஏற்படுத்தினார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications