அத்தனையும் ஏஐ.. தென்காசி நூலகத்தை அதிர வைத்த அகல்விளக்கு பதிப்பகம்.. போலிக்கு முந்திக்கொண்டு பணமா?

Subscribe to Oneindia Tamil

தென்காசி: திமுக ஆட்சியில் கோவை பெரியார் அறிவுலகம் உள்பட தமிழகம் உள்ள நூலகங்களில் புத்தக கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக தவெக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை லிசாரணை நடத்தி வருகிறார்கள். பெரியார் அறிவுலகத்தை ஊழலையே தோற்கடிக்குமளவுக்கு தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் முறைகேடு நடந்துள்ளது. புகாருக்குள்ளான அகல் விளக்கு பதிப்பகம், ஏஐ மூலம் 2,200 போலி புத்தகங்கள் தயாரித்து அனுப்பியது தெரியவந்தது. கடந்த ஆட்சியில் அந்த பதிப்பகத்துக்கு மட்டும் பணம் விரைவாக சென்ற மர்மம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் கொள்முதலில் ஊழல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், தென்காசி மாவட்ட மைய நூலகம், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் புத்தக கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல தினசரி பல்வேறு முறைகேடுகள் வெளியாகி வருகிறது.

Tenkasi District Central library

தென்காசி நூலகத்தில் ஊழல்

கோவை பெரியார் அறிவுலகம் மட்டுமல்ல, தென்காசி மாவட்ட மைய நூலகத்திற்கும் அகல் விளக்கு பதிப்பகத்தில் இருந்து ஏராளமான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இவற்றில் சுமார் 2,200 புத்தகங்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட போலியான புத்தகங்கள் என தெரியவந்தது. ஒவ்வொரு புத்தகத்தின் மதிப்பும் ரூ.1,000க்கும் மேல் விலையை கொண்டது. 2025 டிசம்பர் 2025 ஆம் ஆண்டில் இருந்து அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து தென்காசி நூலகத்துக்கு புத்தகங்கள் வரத்தொடங்கியுள்ளது.

திமுக ஆட்சியில் அகல் விளக்கு பதிப்பகத்தில், தென்காசி நூலகத்துக்கு அதிக புத்தகங்கள் கொள்முதல் செய்ததாக ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த புத்தகங்கள் பெயர், எழுத்தாளர் பெயர் அதிகம் அறியப்படாத போலியானவை. நிவேதா அன்பழகன், நிவேதா சுப்பையா, மணிஷா சரவணன், மணிஷா ஆகாஷ், மணிஷா சுப்ரமணியன், மோகனா ரவி, கலா முருகன், தாமரை பன்னீர் போன்ற போலியான பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்தனையும் ஏஐ மயம்

மீடியா மேஜிக், பெண் என்பவள் போராட்டம், பெண்ணின் சுகாதார உரிமைகள், பெண்ணும் சுற்றுச்சூழலும் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் புத்தகங்கள் இடம்பெற்றது. இதுகுறித்து நூலகத்தின் ஊழியர்கள் கூறுகையில், "மற்ற பதிப்பகங்களை விட அகல்விளக்கு பதிப்பகத்துக்கு விரைவாக பணம் கொடுக்கப்பட்டது. புத்தகங்கள், ஆசிரியர் பார்த்தபோதே சந்தேகம் ஏற்பட்டது. உயரதிகாரிகளிடம் முறையிட பயமாக இருந்தது. காரணம் அதே உயரதிகாரிகள் தான் அந்த பதிப்பகத்துக்கு விரைந்து பணம் ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டினர். இந்த போலி புத்தகங்கள் தென்காசி மாவட்ட மைய நூலகம் மற்றும் சுற்றுவட்டார நூலகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+