அண்ணாச்சி போட்ட மாஸ்டர் பிளான்! திமுகவில் இணைந்த அதிமுக நகராட்சி சேர்மன்! என்ன பின்னணி?
அதிமுக நகர்மன்றத் தலைவர் திமுகவில் இணைந்திருக்கிறார்.
தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அதிமுக நகர்மன்றத் தலைவர் ராமலட்சுமி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.
நகராட்சி சேர்மனை திமுக பக்கம் செல்லவிடாமல் அதிமுக தரப்பில் பல்வேறு கட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சியானது தமிழகம் கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த நகராட்சியாக பார்க்கப்படுகிறது. அதிமுகவை சேர்ந்த ராமலட்சுமி கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு லோக்கல் பாலிடிக்ஸில் அதிமுக நிர்வாகிகளுடன் பஞ்சாயத்துக்கள் வந்ததால் அந்த தருணம் பார்த்தூ திமுக தரப்பில் அணுகப்பட்டுள்ளது.

பல்வேறு கட்ட முயற்சி
மேலும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதனும் அதிமுக நகர்மன்றத் தலைவரை திமுக பக்கம் இழுப்பதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தார். அதுமட்டுமல்ல திமுக நிர்வாகிகளால் அண்ணாச்சி என அழைக்கப்படும் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் அதிமுக பிரமுகர்களை திமுகவுக்கு வளைக்க தீவிரம் காட்டி வருகிறார்.

இணைப்பு வைபவம்
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்தவுடன் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி திமுகவில் இணைந்தார். இதேபோல் தனது நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களையும் விரைவில் திமுகவில் இணைக்கும் பணிகளை தொடங்கிவிட்டார் ராமலட்சுமி. சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தடுக்க முயன்ற அதிமுக
நகராட்சி சேர்மன் ராமலட்சுமியை திமுக பக்கம் செல்லவிடாமல் அதிமுக தரப்பில் பல்வேறு கட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது குறிப்பிடத்தக்கது. நேஷனல் பாலிடிக்ஸ், ஸ்டேட் பாலிடிக்ஸ்களை காட்டிலும் லோக்கல் பாலிடிக்ஸ் பவர்ஃபுல்லாக இருப்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே உதாரணமாகும்.












Click it and Unblock the Notifications