தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
நெல்லை: தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் கொளுத்தி வரும் நிலையில் தென்காசி, செங்கோட்டை பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட சுற்று வட்டராப் பகுதிகளில் நேற்று மாலையில் வானம் தீடீர் என கறுத்து சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
இந்த மழையின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அனல் காற்றின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான நிலை நீடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications