10ம் வகுப்பு மாணவனுடன் மாயமான தென்காசி ஆசிரியை... திருப்பூரில் கைது!
தென்காசி: தென்காசி அருகே கடந்தாண்டு மாயமானதாக தேடப்பட்டு வந்த ஆசிரியையும், மாணவரையும் திருப்பூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார். மத்திய போலீஸ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுடைய 15 வயது மகன், தென்காசி ஈனாவிலக்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான்.

கடந்தாண்டு மார்ச் மாதம் 31ம் தேதி அன்று பள்ளிக்குச் சென்ற அம்மாணவன் மாலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த பெற்றோரின் புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, மாயமான மாணவனும் அவனுடைய வகுப்பு ஆசிரியையான செங்கோட்டை காலாங்கரை பகுதியைச் சேர்ந்த கோதைலட்சுமியும் (29) காதலித்து வந்ததும், அவர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடியதும் தெரியவந்தது.
இதற்கிடையே, சிவசுந்தரபாண்டியனை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி அவரது தாயார் மாரியம்மாள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘என் மகனை அவர் படிக்கும் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை கோதை லெட்சுமி (29) கடத்திச் சென்றுள்ளார். அவரால் என் மகன் உயிருக்கு ஆபத்துள்ளது' எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நெல்லை எஸ்.பி. ஆஜராகி, இந்த வழக்கை புளியங்குடி டி.எஸ்.பி. விசாரித்து வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் ஆசிரியை கோதைலெட்சுமியை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி அவரது தந்தையும் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் புளியங்குடி டி.எஸ்.பி.யும் நேரில் ஆஜராகி, இருவரையும் தேடி வருவதாகக் கூறினார். பின்னர் ஆசிரியை மற்றும் மாணவனை 3 வாரங்களில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், ஆசிரியை கோதையும், அம்மாணவரும் தற்போது திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிக்கு சென்று வருவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக திருப்பூருக்கு விரைந்து சென்ற கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமையில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அவர்களைக் கைது செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications