பெண்ணுறுப்பு ஆசையால்.. மர்ம உறுப்பை இழந்து.. 2 திருநங்கைக்கும் இதே வேலை.. அதிரவைத்த தென்காசி ஆபரேஷன்
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.. அத்துடன், விடிகாலையில் கேட்ட திருநங்கையின் அலறல் சத்தத்தின் அதிர்வலைகள் இன்னமும் நீங்கவில்லை என்கிறார்கள். இது தொடர்பான விசாரணையை ஆலங்குளம் போலீசார் முன்னெடுத்த, 2 நபர்களையும் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.. அப்படியென்ன நடந்தது ஆலங்குளத்தில்?
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த திருநங்கை மகாலட்சுமி... இவருடன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசர்குளத்தைச் சேர்ந்த சிவாஜி கணேசன் என்ற சைலு என்பவர் கடந்த 2 வாரங்களாக தங்கியிருந்தார்.. இவர் ஆணாக இருந்து திருநங்கையாக மாறியதாக தெரிகிறது.

அதிகாலையில் அலறல்
இந்த நிலையில் நேற்று அதிகாலை, மகாலட்சுமியின் வீட்டில் சைலுவின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் மகாலட்சுமி உட்பட அங்கிருந்தவர்கள் பதறிப்போய் பார்த்தபோது, மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார் சைலு..
இதையடுத்து, மகாலட்சுமி உள்ளிட்ட திருநங்கைகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், சைலு இறந்துவிட்டார்.
தென்காசி அரசு மருத்துவமனை
இதுகுறித்து தகவலறிந்து வந்த கடையம் போலீசார், சைலுவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் துவங்கினார்கள்.. அப்போதுதான் அந்த பகீர் தகவல் வெளியானது..
அதாவது, சைலு பெண்ணாக மாறுவதற்காக தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள முயற்சி செய்ததாகவும், இந்த விபரீதத்தின்போது இறந்து விட்டதாகவும் திருநங்கைகள் கூறயிருக்கிறார்கள்.. இதையடுத்து, விசாரணை மேலும் தீவிரமானது. அப்போதுதான் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளியானது.
2 திருநங்கைகள் வாக்குமூலம்
சைலு பெண்ணாக மாறுவதற்காக அவரது மர்ம உறுப்பை மகாலட்சுமியும், இன்னொரு திருநங்கையான மதுமிதா என்பவரும் சேர்ந்து கத்தியால் அறுத்தார்களாம்.. இதில் அதிகமாக ரத்தம் கொட்டியிருக்கிறது.. அதீத ரத்தப்போக்கு காரணமாகவே சைலு இறந்ததும் தெரிய வந்தது..
இதையடுத்து கவனக்குறைவாக செயல்பட்டது, குற்றத்தை மறைத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகள் மகாலட்சுமி, மதுமிதா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் என்ன ஒரு கொடுமையென்றால், கைதான 2 பேரும், ஏற்கனவே பெண்ணாக மாற முயன்ற பலருக்கு , மருத்துவ உபகரணம் எதுவும் இல்லாமல், மர்ம உறுப்பை அறுத்து ஆபரேஷன் செய்ததாக போலீசார் சொல்கிறார்கள்.. இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஆலங்குளத்தில் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications