அதிமுக கோஷ்டிகளிடையே வன்முறை வெடிக்கும் அபாயம்.. சசியை சந்திக்கும் தினகரன்!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற தினகரன் தரப்பு முனைப்புடன் இருக்கும் நிலையில் இதைத் தடுக்க எடப்பாடி தரப்பு தடாலடியில் இறங்க உள்ளது.
அதிமுக கோஷ்டிகள் இதுவரை கருத்துகளால் மோதிக் கொண்டிருந்தன. இப்போது நேருக்கு நேர் மோதும் நிலை உருவாகி உள்ளது.

தினகரன் திட்டம்
அதிமுக மாவட்ட நிர்வாகிகளை வரும் 5-ந் தேதியன்று சென்னைக்கு வர உத்தரவிட்டுள்ளார் துணைப் பொதுச்செயலர் பொறுப்பில் உள்ள தினகரன். இதன் மூலம் அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற தினகரன் முயற்சிப்பது உறுதியானது.

எடப்பாடி தரப்பு உறுதி
தினகரன் வசம் மீண்டும் அதிமுக சென்றுவிடக் கூடாது என்பதில் எடப்பாடி தரப்பு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக கோட்டையிலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் அடுத்தடுத்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

தினகரன் கைது?
தினகரனை அதிமுக அலுவலகத்துக்குள் நுழையவிடாமல் தடுப்பது; அதையும் மீறினால் கைது செய்வது என அடுத்த பாய்ச்சலுக்கு எடப்பாடி தரப்பு தயாராகிவிட்டது. இந்நிலையில்தான் சசிகலாவை தினகரன் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்னதான் நடக்கும்?
எடப்பாடி அரசை கவிழ்க்கும் முயற்சியில் சசிகலா குடும்பம் இறங்குமா? இன்னொரு கூவத்தூர் அரங்கேறுமா? சசிகலா குடும்பத்துக்கு எதிராக சாட்டையை சுழற்றுவாரா எடப்பாடி? என ஏகப்பட்ட கேள்விகளுடன் தமிழக அரசியல் களம் பரபரக்க காத்திருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications