தூத்துக்குடி: வெடிகுண்டுகளை வீசி மீனவர்கள் மோதல்: காயமடைந்த மீனவர் மரணம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இருதரப்பு மீனவர்கள் வெடிகுண்டுகளை வீசி மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மணப்பாட்டில் திருச்சிலுவை ஆலயம் உள்ளது. இங்கு திருவிழா நடத்துவது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 தரப்பினரும் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை வீசி மோதிக்கொண்டனர்.
இந்த மோதலில் மணப்பாடு ராஜாதெருவைச் சேர்ந்த ரோசாரி (வயது 35), ரேடியோ தெருவைச் சேர்ந்த ரகுபதி (45) மீனவர் காலனியைச் சேர்ந்த ரெஜிஸ்டன் (30), சுனாமிகாலனியை சேர்ந்த பாஸ்கர் (50), லாரன்ஸ் மனைவி ஒவிலியாள் (50), ரேடியோ தெருவைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் லியோ (48) மீனவர் காலனியைச் சேர்ந்த பிரட்வின் (31) ஆகிய 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 7 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ரோசாரி இறந்தார்.
இதனையடுத்து ரோசாரி தரப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 2 கார், 3 பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக சுனாமி காலனியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் மணப்பாடை சேர்ந்த ஹயாஸ், தயா, பென்டிகர், ஜெயா, மில்டன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சேவியர் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ், மகிபெல், ராபின்சன், விஜயேந்திரன், ஜான்சன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலால் மணப்பாடு பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இந்த மோதல் காரணமாக மணப்பாடு மீனவர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறி பக்கத்தில் உள்ள மீனவ கிராமங்களில் குடியேறி உள்ளனர்.
இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.துரை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications