கொரடாச்சேரி அய்யனார் கோயிலில் இரு தரப்பினரிடையே மோதலால் பதற்றம்! போலீஸ் குவிப்பு
கொரடாச்சேரி: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே அய்யனார் கோயில் நிர்வாகத்தில் பங்கு கேட்டு ஒரு தரப்பினர் கோயிலை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனால் அந்த பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே முசிறியம் ஊராட்சி திட்டாணிமுட்டம் கிராமத்தில் கூத்தையனார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் ஒரு தரப்பினர் பராமரித்து நிர்வாகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்தக் கோயிலில் அனைத்து தரப்பினரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு தரப்பினர் எங்களுக்கும் கோயில் நிர்வாகத்தில் அனுமதி தர வேண்டும், கோயில் விழாவிற்கும்
பராமரிப்பு சம்பந்தமான அனைத்து செலவினங்களுக்கும் நாங்களும் தேவையான தொகையை தருகின்றோம் எனவும், அனைத்து விழாக்களையும் சேர்ந்தே நடத்துவோம் எனவும் கூறியுள்ளனர்.
நிர்வகித்தல்
இதற்கு, எதிர் தரப்பினர், "கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் மட்டுமே நிர்வகித்து வரும் இந்த கோவிலில், யார் வேண்டுமானாலும் வந்து சாமி கும்பிடலாம். ஆனால் நிர்வாகத்தில் பங்கு கேட்கக் கூடாது. தரமாட்டோம்" என ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர்
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் தாசில்தாரிடமும் கடந்த சில ஆண்டுகளாக மனு கொடுத்தும் அமைதி பேச்சுவர்த்தை நடத்தியும் எந்த சுமூக உடன்படிக்கையும் ஏற்படவில்லை என கூறி வந்தனர்.
விசாக நட்சத்திரம்
இந்நிலையில் வைகாசி விசாக நட்சத்திர நாளான நேற்று இந்த கோயிலில் பால்குட அபிஷேகம் நடத்துவதாக, நிர்வாக அனுமதி மறுக்கும் தரப்பினர் முடிவு செய்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மற்றொரு தரப்பினர் காலையிலேயே கோவிலுக்கு முன்பு வந்து அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அபிஷேக விழா
இதனால் இன்று நடைபெறவிருந்த பால்குட அபிஷேக விழா தடைப்பட்டது. மேலும் இந்த விவகாரம் குறித்து வரும் 12-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும்
இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலிலும் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் வெடித்தது.
சட்டம் ஒழுங்கு
இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதையடுத்து மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கோயிலை திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற வழக்கு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திரௌபதி அம்மன் கோயிலை திறந்து பொதுமக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் ஒரு கால பூஜை மட்டும் நடத்த உத்தரவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேல்பாதி தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல்லை வருவாய் துறையினர் அகற்றி நடை திறக்கப்பட்டது.
கோயிலுக்குள் வழிபாடு
இந்த நிலையில் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த இரு தரப்பு மக்களுக்கும் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இரு தரப்பினரும் சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications