"நீங்களே வீட்டுத் தோட்டம் போட”- சென்னையில் 100 இடங்களில் இன்று விதை, செடி, உர விற்பனை!
சென்னை: சென்னையில் வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோருக்காக விதைகள், செடிகள், உரங்கள் ஆகியவை சென்னையில் இன்று 100 இடங்களில் ரூபாய் 500 க்கு வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சித்ரசேனன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில், "தமிழக அரசின் "நீங்களே செய்து பாருங்கள்" திட்டத்தின்படி இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை ஆகிய இரு நாட்களில் சென்னை மாநகரத்தில் மாநகராட்சி பூங்கா உள்ளிட்ட 100 இடங்களில் "நீங்களே செய்து பாருங்கள்" தளைகள் விற்பனை செய்யப்பட உள்ளது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து மாநகராட்சி பூங்கா மற்றும் மாநகராட்சி பள்ளிகள் ஆகிய 100 இடங்களில் நீங்களே செய்து பாருங்கள் தளைகளை வினியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த தளையில் தேங்காய் நார் கழிவு 2 கிலோ கேக்-பாலித்தீன் பைகள் (6), தக்காளி, கத்திரி, மிளகாய் நாற்றுகள் (10), வெண்டை, அவரை, அரக்கீரை, முளைக்கீரை, பாலக்கீரை, முள்ளங்கி, கொத்தமல்லி காய்கறி வகைகள் (7 பக்கெட்டுகள்), பாஸ்போபாக்டீரியா (200 கிராம்), அசோஸ்பைரில்லம் (200 கிராம்), சூடோமோனாஸ் (100 கிராம்), டிரைக்கோடெர்மாவிரிடி (100 கிராம்), வேப்பெண்ணெய் (100 மில்லி), நீரில் கரையும் உரம் (1 கிலோ), செயல்முறை விளக்க குறுந்தட்டு (ஒன்று) ஆகியவை அடங்கி இருக்கும்.
இந்த தளை ரூபாய் 500க்கு விற்பனை செய்யப்படும். இன்று நீங்களே செய்து பாருங்கள் தளைகள் காலை 8 முதல் மாலை 4 மணி வரை 100 இடங்களில் வழங்கப்படும். அதே இடத்தில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நீங்களே செய்து பாருங்கள் தளைகள் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications