ஐ.நா.வில் ராஜபக்சேவை பேச அனுமதிக்கக் கூடாது- சென்னையில் செப்.3-ல் டெசோ ஆர்ப்பாட்டம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பேச அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செப்டம்பர் 3-ந் தேதி தமிழீழ விடுதலை ஆதரவாளர் அமைப்பான டெசோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொதுச்செயலர் அன்பழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- ஈழத் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வு கனியும் காலத்தை மத்திய அரசு உடனடியாக விரைவுபடுத்த வேண்டும்
- தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இலங்கை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 62 படகுகளை மீட்க வேண்டும்
- நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை பேச அனுமதிக்கக் கூடாது.
- இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா. மனித உரிமைகள் குழுவுக்கு மத்திய அரசு விசா வழங்க வேண்டும்
- டெசோ கூட்டத்தில் நிறைவேற்ற இந்த தீர்மானங்களை முன்வைத்து சென்னையில் செப்டம்பர் 3-ந் தேதி "பெருந்திரள்" ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

More From
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications