சசிகலாவுக்கு ஆறுதல் சொன்ன தா. பாண்டியன், டெக்கான் கிரானிக்கல் அதிபர் சாந்தி ரெட்டி!
ஜெயலலிதா மறைவுக்காக சசிகலாவிடம் தா. பாண்டியன் ஆறுதல் கூறினார். டெக்கான் கிரானிக்கல் சாந்திரெட்டியும் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு சசிகலாவை நேரில் சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் ஆறுதல் கூறினார்.
சென்னை போயஸ் தோட்டம் இல்லத்தில் காலை முதல் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள், ஜாதி சங்கத் தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். சசிகலாவை கூட்டம் கூட்டமாக சந்தித்து அதிமுக தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இதேபோல் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள், பத்திரிகை அதிபர்களும் சசிகலாவை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் இன்று சசிகலாவை துயரம் தோய்ந்த முகத்துடன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வழக்கமாக தம்முடைய சிவப்பு துண்டை தோளிலேயே போட்டிருக்கும் தா. பாண்டியன் ஆறுதல் கூற வந்ததாலோ என்னவோ அதை கையில் வைத்துக் கொண்டு சசிகலாவுக்கு ஆறுதல் கூறினார். ஏற்கனவே பாலசுப்பிரமணிய ஆதித்தன், இந்து என் ராம் ஆகியோர் சந்தித்த நிலையில் இன்று டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேட்டின் அதிபர் சாந்தி ரெட்டி, அதன் ஆசிரியர் பகவான்சிங் ஆகியோரும் சசிகலாவை நேரில் சந்தித்தனர்.

முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், புரட்சி பாரதம் பூஜை ஜெகன் மூர்த்தி ஆகியோரும் சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications