இவங்கள எல்லாம் பாத்தா வயிறு எரியுதுண்ணே!- நடிகர் குமரனின் ஆதங்கம்
சென்னை: ஒரு மாநிலத்தையே அடியோடு மாற்றிவிட 5 ஆண்டுகள் போதுமானது. ஆனால் இந்த 5 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தவர்கள் ஒண்ணுமே செய்யலன்னு நினைக்கும்போது வயிறு எரியுதுண்ணே, என்று ஆதங்கத்தில் புலம்புகிறார் ஒரு நடிகர்.
அவர் 'தைரியம்' குமரன். மெத்தப் படித்த, வசதியான இளைஞர். தைரியம், வருச நாடு உள்பட நான்கைந்து படங்களில் நடித்துவிட்டார். சினிமாவிலேயே கவனம் செலுத்தியிருந்தால் பெயர் சொல்லும் அளவுக்கு ஜெயித்திருப்பார். ஆனால் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சுய ஆதங்கத்தில் தேர்தலில் குதித்துள்ளதாகக் கூறுகிறார். அதுவும் தனியாக அல்ல... இளைஞர் மற்றும் மாணவர் கட்சி (ஒய்எஸ்பி) என்ற தனது கட்சியின் சார்பில் தமிழகத்தில் 41 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
இவரது கட்சியின் சார்பில் 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை நிறுத்தியும், வேண்டுமென்றே பிற வேட்பாளர்களின் விண்ணப்பங்களை நிராகரித்து விட்டார்கள் தேர்தல் அதிகாரிகள் என்று குற்றம்சாட்டுகிறார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அவங்க நோக்கமே எப்படியாவது பிற வேட்பாளர்களை தேர்தலில் நிற்க விடாமல் செய்வது போலத்தான் இருந்தது. எல்லாம் சரியாக இருந்தாலும், சின்ன விஷயத்தைக் காரணமாக வைத்து நிராகரித்தார்கள். பெரிய கட்சிகளுக்கு சாதகமாகத்தான் நடக்கிறார்கள்," என்கிறார் குமரன்.
அண்ணாநகர் தொகுதிகள் அமைச்சர் கோகுல இந்திராவை எதிர்த்து களமிறங்கியிருக்கும் குமரன், ஆளுங்கட்சி மீது வைக்கும் குற்றச்சாட்டு அழுத்தமானது.
"நான் அவர்களை விமர்சிக்க விரும்பவில்லை. ஒரு மாநிலத்தை அடியோடு மாற்றியமைக்க 5 ஆண்டுகள் போதுமானது. ஆனால் இவர்கள் எதையுமே செய்யவில்லை. நினைச்சாலே வயிறு எரியுது. இதை ஒரு குற்றச்சாட்டா சொல்லிக்கிட்டிருக்கிறதை விட, நாமே களத்துல இறங்கி செய்யலாம்னுதான் 41 வேட்பாளர்களை நிறுத்தியிருக்கேன். சத்தியமா நான் பணத்துக்கு ஆசைப்பட்டு தேர்தலில் நிற்கவில்லை. அது எனக்கு தேவையான அளவுக்கு இருக்கு. நான் தினமும் பார்க்கிற இந்த பகுதி மக்களின் அத்தனைப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன். அது என்னால முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் போட்டியிடுகிறேன். எனக்கு குக்கர் சின்னம் கொடுத்திருக்காங்க. குக்கர் எப்படி ஒவ்வொரு வீட்டுலயும் பிரிக்க முடியாத சமாச்சாரமா இருக்கோ அப்படி இருப்பேன் நானும்," என்கிறார் குமரன்.
இவர் சோழவரம் சேர்மனாக இருந்துள்ளார். ஏற்கெனவே நீலகிரி எம்பி தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications