விஜய் சொகுசு வாழ்க்கை.. கடலோரத்தில் டாம் குரூஸ் பாணியில் பிரமாண்ட பங்களா! சொத்து விவரம் இதோ
சென்னை: தமிழ் சினிமாவின் இதயத் துடிப்பு, கோடி ரசிகர்களின் கனவு நாயகன், தளபதி விஜய்.. திரையில் மின்னும் ஒவ்வொரு காட்சியும், பாடலும், வசனமும் கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொள்ளும் நிலையில், தனது லைஃப் ஸ்டைலாலும் பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.
விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு, விஜய் வாங்கும் சம்பளம் எவ்வளவு, விஜய் வைத்துள்ள கார்கள் என்ன என்பதை பற்றி விரிவாக ஒரு ரவுண்ட் பார்ப்போமா..

சொர்க்கம் போன்ற வாழ்க்கை: சென்னையின் அழகிய கடற்கரையில், வங்காள விரிகுடாவின் அற்புதமான காட்சிகளை ரசிக்கும் வகையில், தளபதி விஜய் தனக்கென ஒரு சொர்க்கத்தை உருவாக்கியுள்ளார். சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள கேசுவரினா டிரைவ் என்ற இடத்தில் விஜயின் அந்த பங்களா வீடு உள்ளது. விஜய் தனது அமெரிக்க பயணத்தின் போது டாம் குரூசின் கடற்கரை வீட்டை பார்த்தார். கவரப்பட்டார். எனவே புகைப்படத்தை பதிவு செய்து கொண்டு சென்னையில் அதுபோல ஒரு வீட்டை விஜய் உருவாக்கினார்.
சொகுசு கார்கள்: திரைப்படங்கள், பிராண்ட் ஒப்பந்தங்கள் என பல துறைகளில் சாதித்து வரும் விஜய், ஆண்டுக்கு ரூ.100 முதல் 120 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார். இதில் பெரும்பகுதி அவரது திரைப்படங்களின் வெற்றியாலும், பல பிரபல பிராண்டுகளுடன் இணைந்து செயல்படுவதாலும் கிடைக்கிறது. விஜய்யின் கார் சேகரிப்பு ஹாபிதான் அவரது ஆடம்பர வாழ்க்கை முறையின் மற்றொரு அம்சம். ரூ.2.5 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஆடி ஏ8 எல், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, எக்ஸ்6, ரேஞ்ச் ரோவர் எவோக், ஃபோர்டு மஸ்டாங், வால்வோ எக்ஸ்சி90, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ என பல சொகுசு கார்கள் அவரது கேரேஜில் இடம் பிடித்துள்ளன.
அதிக சம்பளம்: பீஸ்ட் படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம் 100 கோடி, தர்பார் படத்திற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் 90 கோடி. இதன் மூலம் தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய் முன்னிலை வகிக்கிறார். விஜயின் சொத்து நிகர மதிப்பு சுமார் ரூ.410 கோடி. திரைப்படங்கள் மற்றும் பிராண்ட் ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, பல்வேறு துறைகளில் முதலீடு செய்தும் விஜய் தனது பணத்தை பெருக்கி வருகிறார். இவ்வாறு, திரைப்படம், வியாபாரம் என பல துறைகளில் சாதித்து வரும் விஜய், இந்திய சினிமாவின் மிகவும் வெற்றிகரமான நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
வருமான வரி சோதனை: 2020, பிப்ரவரி 5, அன்று விஜயின் சென்னை இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, அசையா சொத்துக்களில் அவர் செய்த முதலீட்டைக் குறிப்பிட்டு, வரி ஏய்ப்பு குறித்து விசாரித்தனர். இந்த சோதனையின் போது குறிப்பிடத்தக்க எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் மார்ச் மாதம் அறிவித்துவிட்டனர்.
விஜய் அரசியல்: தனது கடின உழைப்பால், திறமையால் உச்சத்தை தொட்ட விஜய், இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். திரையுலகில் வெற்றி பெறுவதுடன், தனது சமூகப் பொறுப்பையும் உணர்ந்து பல நலன் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதோ இப்போது அரசியலுக்கும் வந்துள்ளார். இப்போதும் எஞ்சி நிற்பது ஒரு கேள்விதான். இத்தனை சொகுசு வாழ்க்கை வாழும் ஒருவர், கரடு முரடான அரசியலுக்குள் வர காரணம் என்ன என்பதுதான் அது!












Click it and Unblock the Notifications