தாலி அகற்ற தடை.. கீ. வீரமணி வீட்டுமுன் பட்டாசுடன் வந்த இந்து அமைப்பினர் கைது
சென்னை: தாலி அகற்றும் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் திராவிடர் கழகத்தலைவர் கீ. வீரமணி வீட்டின் முன்பு பட்டாசுடன் திரண்ட 30க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த திராவிடர் கழகத்தினருக்கு வழங்கிய அனுமதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதுபற்றி அறிந்ததும் இந்து மகாசபை தென்சென்னை மாவட்ட தலைவர் வெங்கட், இளைஞரணி செயலாளர் சுரேஷ் உள்பட 30க்கும் மேற்பட்டோர் அடையாறில் உள்ள கி.வீரமணி வீட்டு முன்பு பட்டாசு - இனிப்புடன் திரண்டனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாருக்கும், இந்து மகாசபை அமைப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் - தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 30 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

கோவையில் மஞ்சள்கயிறு

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலிக்கயிறு அகற்றும் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பாரத் அனுமன் சேனா கட்சி சார்பில் பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு, வளையல், குங்குமம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு வழங்கினர்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications