வைரமுத்துவின் பாடல்களில் அபத்தம்... தடதடக்கும் கவிஞர் தாமரை
சென்னை: கவிஞர் வைரமுத்துவின் திரைப்படப் பாடல்களில் அபத்தம் இருப்பதாக சாடியுள்ளார் கவிஞர் தாமரை.
ஃபேஸ்புக்கில் Suresh Kannan என்பவர் தம்முடைய பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,
'ஒல்லிக்குச்சி உடம்புக்காரி' (படம்:ரெட்) என்கிற பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
'நான் சமைஞ்சதும் அந்த சாமி வந்து உன் காதில் சொல்லுச்சு தானே' என்றொரு வரி பெண் பாடுவதாக வருகிறது. (எழுதியவர் வைரமுத்து)

ஆத்திகர்கள் முதல் நாத்திகர்கள் மாதிரியான நபர்கள் வரை சாமியிடம் தினசரி ஆயிரம் கோரிக்கைகளை முறையிட்டுக் கொண்டிருப்பது போதாதென்று நடுவில் சாமிக்கு இந்த வில்லங்கமான பணிகள் வேறயா? இப்படில்லாம் ஓவர்டைம் செஞ்சா சாமிக்கும் Stress, Hypertension, B.P. பிரச்சினைகள்லாம் வராதா?
இந்து முன்னணி போன்றவர்கள் படம் வெளிவரும் சமயத்தில் இதையெல்லாம் கவனிக்காமல் சும்மாவா இருந்தார்கள்?
என்று பொதுவாக ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு கவிஞர் தாமரை எழுதியுள்ள பதில்:
பெண்கள் இப்படியெல்லாம்தான் பேசுவார்கள் என்று ஆண்களாகக் கற்பனை செய்து கொண்டு எழுதுவதில் சேர்த்தி இது !!!

நான் பாடல் எழுத வந்த போது எதையெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்தேனோ இல்லையோ, எதையெல்லாம் எழுதக் கூடாது என்று கண்டுபிடித்து விட்டேன்...
அபத்தம்...
என ஒரே போடாகப் போட்டு சாடியுள்ளார்.
என்னவாகுமோ இந்த பஞ்சாயத்து!


Click it and Unblock the Notifications
