தம்பித்துரைக்கு ஒன்னும் தெரியாது... போட்டுத்தாக்கும் ஓபிஎஸ்!
எம்.பி தம்பித்துரைக்கு எதுவும் தெரியாது எப்படியோ காலத்தை ஓட்டுகிறார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக எம்.பி தம்பிதுரைக்கு பிரதமர் அலுவலக நடைமுறை கூட தெரியாது என முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். எதுவும் தெரியாமலேயே காலத்தை ஓட்டி வருகிறார் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டுதான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தர்மயுத்தத்தை தொடருவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆதரவாளர்களை இன்று தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் சந்தித்த ஓ.பி.எஸ் பின்னர் அவர்களிடையே பேசினார். அப்போது அவர், ஜெயலலிதா நூறு ஆண்டு காலம் இருந்து நம்மை வழி நடத்துவார் என்று நினைத்தோம். ஆனால் இப்படி எங்களை தவிக்க விட்டு விட்டு சென்று விட்டார் என்றார்.

அருகதையில்லை
நான் உயிரோடு இருக்கும் வரை சசிகலா குடும்பத்தினர் யாரையும் கட்சிக்குள் சேர்க்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் அவரது மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதா விரட்டியடித்த அனைவரும் கட்சிக்குள் வந்து விட்டனர். ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சென்று விட்டது. அதை எதிர்த்துதான் நாங்கள் போராடி வருகிறோம் என்றார்.

ஓபிஎஸ் விமர்சனம்
அதிமுக எம்.பியும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரையை மிகக் கடுமையாக விமர்சித்தார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நான் டெல்லி சென்ற பின்னர் தான்,தம்பிதுரை அதிமுக எம்.பிகளை கூட்டிக் கொண்டு பிரதமரை சந்திக்க வருவதாகவே எனக்கு தெரியும்.

தம்பித்துரைக்கு அனுமதியில்லை
டெல்லி வந்த அவருக்கு பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.எனவே நான் சந்திக்கும் போது தம்பிதுரை உடன் வரலாமா? என பிரதமர் அலுவலகத்தில் கேட்டேன்.ஆனால் அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. அதிமுக எம்.பிகள் கையெழுத்திட்ட அந்த கோரிக்கை மனுவையாவது என்னிடம் கொடுங்கள்.உங்கள் சார்பில் பிரதமரிடம் நான் கொடுக்கிறேன் என கூறினேன். ஆனால் அதற்கு தம்பிதுரை மறுப்பு தெரிவித்துவிட்டார்.

காலத்தை ஓட்டுகிறார்
கடைசி வரை பிரதமரை அவர் சந்திக்கவே முடியவில்லை.எப்படி ஒரு பிரதமரை சந்திப்பது என்ற நடைமுறை கூட தெரியாத ஒரு எம்.பியாகத்தான் தம்பிதுரை இவ்வளவு நாள் தனது காலத்தை ஓட்டியுள்ளார் என்றார்.

தர்மயுத்தம்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம். எங்களின் தர்மயுத்தத்தின் முதல்படி இதுதான். இதற்கும் நீதிகிடைக்காவிட்டால் எங்களின் போராட்டம் வேறு மாதிரியாக இருக்கும் என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications