சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கனும் என்று கூறியவரே தம்பிதுரைதான்: அதிமுக எம்பி பரபர குற்றச்சாட்டு!
சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என கூறியவரே தம்பிதுரைதான் என அதிமுக எம்பி அருண்மொழித்தேவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என கூறியவரே தம்பிதுரைதான் என அதிமுக எம்பி அருண்மொழித்தேவன் தெரிவித்துள்ளார். சசிகலா அறிவுரைப்படி பாஜகவுக்கு ஆதரவு என தம்பிதுரை கூறியிருப்பது மனதை புண்படுத்துகிறது என்றும் தம்பிதுரை கூறினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். கட்சி தலைமை முடிவெடுக்கும் என தம்பிதுரை அறிவித்த நிலையில் எடப்பாடியே திடீரென ஆதரவை அறிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த தம்பிதுரை சசிகலாவின் அறிவுரைப்படி தான் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதாக கூறினார். ஆனால் டிடிவி தினகரன் தனியாக விடுத்த ஆதரவு அறிக்கை எடப்பாடி தன்னிச்சையாக அறிவித்ததை காட்டிக்கொடுத்தது.

தம்பிதுரையின் பேச்சு அதிர்ச்சி
இந்நிலையில் அதிமுக எம்பி அருண்மொழித்தேவன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தம்பிதுரையின் பேச்சு அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறினார்.

முன்னுக்குப்பின் முரணாக
தம்பிதுரை முன்னுக்குபின் முரணாக பேசி வருகிறார் என்றும் அருண்மொழித்தேவன் குற்றம்சாட்டினார். தம்பிதுரையின் சொந்தக்கருத்துக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

சசிகலா அறிவுரைப்படி..
தம்பிதுரையால் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சசிகலா அறிவுரைப்படி பாஜகவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு அளித்துள்ளார் என்பது மனதை புண்படுத்துவதாகவும் எம்பி அருண்மொழித்தேவன் கூறினார்.

முதலில் கூறியவரே தம்பிதுரைதான்
மேலும் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒதுக்க வேண்டும் என்று முதலில் கூறியவரே தம்பிதுரைதான் என்றும் அவர் போட்டுடைத்தார். அதிமுக எம்பி ஒருவரே தம்பிதுரை மீது குற்றம்சாட்டியிருப்பது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications