அங்கே அப்பா- மகன் சண்டையைப் பாத்தீங்களா.. எதை மேற்கோள் காட்டுகிறார் பாருங்க தம்பித்துரை!
உத்தரபிரதேசத்தில் அப்பா கட்சித் தலைவராகவும், மகன் முதல்வராகவும் இருப்பதால் பிரச்சினை ஏற்பட்டது. இதே போல ஒரு நிலை தமிழகத்திற்கு வரக்கூடாது என்று லோக்சபா எம்.பி, தம்பித்துரை கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றுள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுள்ளார். இப்போது கட்சியையும், ஆட்சியையும் சசிகலாவே வழி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுவடைந்து வருகிறது.
லோக்சபா எம்.பியும், துணை சபாநாயகருமான தம்பித்துரை முதல்கல்லை வீசி அதிர்வலையை உருவாக்கியிருக்கிறார். சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலாவை தம்பிதுரை இன்று சந்தித்து பேசினார்.

தம்பிதுரையுடன் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, உதயகுமாரும் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, தொண்டர்களின் மனநிலையை ஏற்று சசிகலா விரைவில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வராக ஆட்சித் தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆட்சித் தலைமை ஒருவரிடமும், கட்சித் தலைமை ஒருவரிடமும் இருப்பது தமிழக மக்களுக்கு உகந்ததாக இல்லை. ஆட்சிப் பொறுப்பும், கட்சிப் பொறுப்பும் ஒன்றாக இருந்தால் தான் ஒருமித்த சிந்தனையுடன் செயல்பட முடியும் என்றும் தம்பித்துரை கூறினார்.
ஒ.பன்னீர் செல்வம் முதல்வராகவும்,. சசிகலா பொதுச்செயலாளராகவும் இருப்பதால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு
உத்தரபிரதேசத்தில் கட்சித்தலைவராக அப்பா முலயாம் சிங் யாதவ் இருக்கிறார். முதல்வராக அவரது மகன் அகிலேஷ் யாதவ் இருக்கிறார். ஆட்சித்தலைமையும், கட்சித்தலைமையும் தனித்தனியாக இருப்பதுதான் தற்போது அங்கே பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி உடைந்து போனதற்கு அதுதான் காரணம்.
அதிமுகவில் கட்சித்தலைமையும், ஆட்சித்தலைமையும் ஒருவரிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே கோரிக்கை என்றும் தம்பித்துரை தெரிவித்தார்.
அகிலேஷ் போல ஒபிஎஸ் பிரச்சினை செய்வார் என்று நினைத்து தம்பித்துரை கூறுகிறாரா என்று கேட்கின்றனர் திருவாளர் பொது ஜனங்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications