சசிகலாவை நீக்க என்ன வழின்னு ஓபிஎஸ் தான் சொல்லனும்.. தம்பிதுரை பேட்டி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவை நீக்க என்ன வழி என்பதை ஓ.பன்னீர்செல்வம் தான் சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கபளீகரம் செய்து கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைத்தது சசிகலா கோஷ்டி. இதற்கான முதல்படியாக தம்மை பொதுச்செயலாளராக பதவியேற்றார் சசிகலா. பின்னர் முதல்வராகவும் ஆசைப்பட்டார் சசிகலா. ஆனால் கிடைத்தது சிறைவாசம்.

அதேபோன்று சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட டிடிவி தினகரனும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் மூலமாக முதல்வராகிவிடலாம் என கணக்குப் போட்டார். ஆனால் தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவரும் திஹார் சிறைக்கு சென்று விட்டார்.
இதனிடையே பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இரு அணிகள் சார்பில் தலா 7 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை தான் இன்னும் தொடங்கப்படாமல் இழுபறியிலே உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயயலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற இரண்டு நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இணைப்பு பற்றி பேச முடியும் என ஓபிஎஸ் தரப்பினர் உறுதியாக தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பொதுக்குழு கூடி சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர் என்று கூறினார். மேலும் சசிகலாவை தனிப்பட்ட முறையில் யாரும் நீக்க முடியாது எனக் கூறிய தம்பிதுரை, சசிகலா நியமன விவகாரத்திற்கு, இரு அணியினரும் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும், சசிகலாவை நீக்க என்ன வழி என்பதை ஓபிஎஸ் சொல்லட்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications