உண்மையில் திமுக - பாஜக இடையேதான் கூட்டணி.. தம்பிதுரை போட்ட குண்டு!
திருச்சி: எங்களுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்த உறவும் இல்லை. உண்மையில் திமுக, பாஜக இடையேதான் அது உள்ளது. விரைவில் அது உங்களுக்கே தெரிய வரும் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
திருச்சி வந்த தம்பிதுரை அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியபோது ஜார்ஜ் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்டவை குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
தனது பேட்டியின்போது, மக்கள் எடப்பாடி அரசுக்கு ஆதரவு தருகிறார்கள் அதிகாரிகளும் மக்களின் குறைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். தம்பிதுரை பேட்டியிலிருந்து:

7 தமிழர் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றமே நல்ல தீர்ப்பை தந்துள்ளது நல்ல தீர்வு அம்மாவின் அரசு எடுப்பார்கள் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது நாங்கள் அவர்களை வரவேற்கிறோம்.

ஜார்ஜ் அப்போதே நடவடிக்கை எடுத்திருக்கலாமே
குட்கா விவகாரத்தில் ஜார்ஜ் இருக்கும்போதே நடவடிக்கை எடுத்திருக்கலாம். இப்போது அவர் கூறுவது சரியானதா முறையா என்று எனக்குத் தெரியவில்லை.
அரசின் உள்ள எந்த ஒரு அமைச்சர்களும் பொறுப்பாளர்களும் எந்த ஒரு தவறும் செய்யவில்லை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் தான் இது போன்று நடக்கிறது எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகிறது

விஜயபாஸ்கருக்குப் பாராட்டு
சுகாதாரத்துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் இளம் அமைச்சரே வேண்டும் என்று சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற செய்கிறார்கள் இது எல்லாம் சரியாக தெரியவில்லை.

திமுக பாஜக இடையேதான் கூட்டணி
திமுகவிற்கும் பாரதிய ஜனதாவிற்கும் ஒரு கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு மறைமுகமாக பாஜக உதவி செய்து கொண்டிருக்கிறது. உண்மையான கூட்டணியே அவர்களுக்கு இடையேதான், எங்களுக்கு இடையே இல்ல.

எங்களுக்குத்தான் 40ம்
அதிமுக எப்போது தேர்தல் நடந்தாலும் சந்திக்க உள்ளது. தமிழகம், புதுவையில் 40 தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார் தம்பிதுரை.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்!












Click it and Unblock the Notifications