கூவத்தூர் ரிசார்ட்டுக்கு விரைந்த தம்பித்துரை.. எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனை
கூவத்தூரில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை சந்திக்க லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ரிசார்ட்டுக்கு சென்றுள்ளார்.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்ட பின்னர் லோக் சபா துணை சபா நாயகர் தம்பிதுரை எம்எல்ஏக்களை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூவத்தூரில் 9 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்ப்பார்த்து அவர்கள் காத்திருந்த நிலையில், இன்று சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்களை சந்தித்து பேச வருகை தந்துள்ளார். இன்று ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்துவிட்டால் சட்டசபையில் பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிருப்பிக்க வேண்டும். மேலும், ஓபிஎஸ் ஆதரவு நிலையை யாரும் எடுத்துவிடக் கூடாது என்பது குறித்தெல்லாம் எம்எல்ஏக்களிடம் தம்பிதுரை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சிகரமான செய்தியை கொண்டு வருவார் என்றும் எம்எல்ஏக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். 9 நாள் சிறைவாசத்திற்கு இன்றாவது ஒரு முடிவு கிடைக்குமா என்று எதிர்ப்பார்த்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications