அதிமுகவின் பலம் 30%, திமுக 25%.. ஆனால், பாஜக தான் வெல்லும் என்கிறார் தமிழருவி மணியன்

Subscribe to Oneindia Tamil

Thamizaruvi Maniyan slams DMDK-Congress allinace
சென்னை: லோக்சபா தேர்தலில் தேமுதிக- காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தால் அவற்றை கல்லறையில் புதைக்க சவப்பெட்டிகளுக்கு இப்போதே ஆர்டர் கொடுத்துவிடலாம் என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகளை வைத்து ஒவ்வொரு அணியின் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும் என கணிக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில்,

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பலகீனமான இடதுசாரிகளை கூட்டணியில் வைத்திருக்கும் அ.தி.மு.க. அணி வலிமையாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அ.தி.மு.கவின் வாக்கு வங்கி 30 சதவீதம். இடதுசாரிகளோடு இணையும்போது 34 சதவீதமாகிறது.

தி.மு.கவில் ஏற்பட்டுள்ள சரிவுகளுக்குப் பிறகு அதன் வாக்கு சதவீதம் 18 முதல் 20 சதவீதம்தான். அதன் கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளின் பலத்தை கணக்கிட்டால் தி.மு.க. அணியின் வலிமை 25 சதவீதம். இந்த வலிமையைக் கொண்டு ஜெயலலிதா அணியை வெற்றி கொள்ள வாய்ப்பில்லை.

நீண்ட அரசியல் அனுபவம் பெற்றுள்ள கருணாநிதி இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டதால்தான், 8 சதவீதம் வைத்துள்ள விஜயகாந்த்தை இழுக்க வேண்டும் என முயன்று பார்க்கிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றால் தி.மு.க. அணி பரிதாபகரமான தோல்வியை சந்திப்பதிலிருந்து விடுபடலாம். அவ்வளவுதான்.

பா.ஜ.க. அணியில் விஜயகாந்த் இணைந்தால் அ.தி.மு.கவுக்கு நேர் எதிர் அணியாக பா.ஜ.க. மட்டுமே இருக்கும். தி.மு.க. அணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுவிடும். பா.ஜ.க. அணிக்கு விஜயகாந்த் வராதுபோனால் பா.ஜ.க. அணியின் வெற்றி வாய்ப்புகளில் ஓரளவுக்குத்தான் குறையும். காரணம், இந்தத் தேர்தலில் பெரும்பான்மை வாக்காளர்கள் காங்கிரஸுக்கு எதிராக களமிறங்குவார்கள்.

அவர்களின் வாக்குகள் மோடிக்கு அலையாக வீசிக்கொண்டிருக்கிறது. இந்த அலையைப் பயன்படுத்தி, தே.மு.தி.க. இல்லையென்றாலும் பா.ஜ.க. அணி கணிசமான இடங்களைப் பெற்றே தீரும்.

காங்கிரஸும் தே.மு.தி.க.வும் மட்டும் கூட்டணி வைத்தால் அந்த கட்சிகளை கல்லறையில் புதைக்க 2 சவப்பெட்டிகளுக்கு இப்போதே ஆர்டர் கொடுத்துவிடலாம் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+