மாணவர்களிடையே தீவிரவாத அமைப்புகள் ஊடுருவலாம்.. தமிழிசை புதிய கண்டுபிடிப்பு
மாணவர் அமைப்பினரிடையே தீவிரவாத அமைப்புகள் ஊடுருவி விட்டதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: கதிராமங்கலம், நெடுவாசல் திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராடி வருகின்றனர். இதனை கொச்சைப்படுத்தும் வகையில் மாணவர் அமைப்பினரிடையே தீவிரவாத அமைப்புகள் ஊடுருவிவிட்டதாக தமிழிசை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் தமிழிசை பேசினார். அப்போது, மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தமிழிசை, மாணவர் அமைப்பினரிடையே தீவிரவாத அமைப்புகள் ஊடுருவிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.

மேலும், மாநில பாதுகாப்புக்காக யாரையாவது கைது செய்தால் அதனை எதிர்ப்பதே எதிர்க்கட்சிகளின் வேலை என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டறிக்கை கொடுக்கப்பட்டதாக மாணவி வளர்மதி அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது தமிழக அரசு.
இதற்கு கடும் எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ள நிலையில், பாஜக தலைவர் தமிழிசை, மாணவர் அமைப்பில் தீவிரவாத அமைப்பினர் ஊடுருவியுள்ளனர் என்று கருத்து சொல்லி இருப்பது, போராட்டக்காரர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட வேண்டும் என்று கோரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் பெரும் புரட்சியாக வெடித்தது. தன்னெழுச்சியாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையும் தமிழிசை இப்படித்தான் கொச்சைப்படுத்தி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications