டாஸ்மாக் எதிரான போராட்டத்தில் போலீசார் அடாவடி.. அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கும்... தமிழிசை கண்டனம்
மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: சாமளாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து பல மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போலீசார் திடீரென போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இந்தத் தடியடியில் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பெண்களை போலீஸ் அதிகாரி ஒருவர் ஓங்கி கன்னத்தில் அடித்து விரட்டியடித்தார்.
இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறிய தமிழிசை அதிமுக ஆட்சியில் எதுவேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு போலீஸ் தாக்குதல் சாட்சியாகும் என்று கூறினார்.
மேலும், டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு ரேஷன் கடைகளை அதிகமாக திறக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அப்போது மதுக்கடையை மூடுவதால் ஏற்படும் வருவாயை சரி கட்டலாம் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications