ஜெயிச்சா... சவால் விடும் அமமுக.. என்ன செய்யப் போகிறது அதிமுக!
அதிமுகவுக்கு தங்கதமிழ்ச்செல்வன் சவால் விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: அமமுக-விலிருந்து அதிமுகவுக்கு புதிதாக ஒரு சவால் வந்துள்ளது.
திருவாரூரிலும், திருப்பரங்குன்றத்திலும் கொஞ்ச நாளில் இடைதேர்தல் நடைபெற போகிறது. இதற்காக அதிமுக, திமுக தரப்பினரைவிட அதிகமாக ரவுண்டு கட்டி வேலை பார்ப்பது தினகரன் தரப்பு ஆட்கள்தான்.

லேசான பீதி
குறிப்பாக திருவாரூரில் ஜெயித்தே விடுவது என்ற கங்கணத்தில் ஆட்களை இறக்கி விட்டுள்ளார். வாக்காளர்களை சேர்ப்பது, பிரதான சுவர்களை பிடித்து குக்கர்களை வரைவது, போஸ்டர் அடித்து ஒட்டுவது என்று பம்பரமாக சுற்றி களத்தில் இறங்கி தேர்தல் வேலையை அமமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த ஜரூர் வேலையை பார்த்து அதிமுக, திமுக தொண்டர்களிடையே லேசான பீதிகூட ஏற்பட்டுள்ளது.

வெற்றி எங்களுக்கே
இந்நிலையில், முன்னாள் எம்.பி.யான மறைந்த மூக்கையா தேவரின் 39-வது நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டிக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன், மூக்கையா தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, வழக்கமான நம்பிக்கையுடன், "திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் நாங்கள் தான் வெற்றிபெறப் போகிறோம்" என்றார்.

சவாலுக்கு தயாரா?
பிறகு, "ஆனால் அப்படி வெற்றி பெற்றுவிட்டால் அதன்பிறகாவது அதிமுகவினர் மனம் திருந்த வேண்டும், பிறகு அ.தி.மு.கவையும், கட்சி சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும், ஒருவேளை நாங்கள் தோற்றுவிட்டால், அதாவது அவங்க ஜெயித்துவிட்டால், நாங்கள் அவர்களுடன் இணைந்துகொள்கிறோம். ஆனால், நாங்கள் வெற்றிபெற்றால் அவர்கள் எங்களுடன் இணைந்துகொள்வார்களா? இந்த சவாலுக்கு அவர்கள் தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்"

நூல்விடுகிறாரா?
இதன்மூலம் ஒன்று தெரிகிறது. ஜெயித்தால் கட்சி, இலையை கொடுத்துவிட வேண்டும் என்கிறார் சரி, தாங்கள் தோற்றுவிட்டால் அதிமுகவில் சேர்ந்து கொள்கிறோம் என்கிறாரே... இவ்வளவு சவால்விட்ட பிறகும் அங்கு சேர்ப்பார்களா? அதிமுகவில் சேர்ந்து கொள்கிறோம் என்று சொல்ல காரணம் பயமா? நம்பிக்கையா? அல்லது இப்போதே இணைந்து கொள்ள சவால் என்ற பெயரில் நூல் விட்டுபார்க்கிறாரா? ஒன்றும் விளங்கவில்லையே!!
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications